அல்-ஹிறா வித்தியாலயத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்கு சென்ற ஷிப்லி பாறுக்

0
74

-எம்.ரீ. ஹைதர் அலி-

unnamed (19)கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைவாக காத்தான்குடி மட்/மம/அல்-ஹிறா வித்தியாலயத்தின் புனரமைப்பு பணிகளுக்காக 10 இலட்சம் ரூபா மாகாண சபையினூடாக நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்புனரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்கும், பாடசாலையின் ஏனைய தேவைப்பாடுகள் தொடர்பான விடயங்களை கேட்டறிந்து கொள்வதற்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் 2016.09.05ஆந்திகதி பாடசாலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி, புனரமைப்பு தொடர்பான விடயங்கள், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், மற்றும் பல தேவைகளை கேட்டறிந்து கொண்டதோடு எதிர்வரும் காலங்களிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களினூடாக அல்-ஹிறா பாடசாலையின் மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்வதாகவும் வாக்குறுதியளித்தார்.

unnamed (20)சுமார் 100 வருட வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலையானது காத்தான்குடியில் கல்விச் சேவையினை திறம்பட வழங்குகின்ற முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகும். மிகவும் குறுகியதொரு நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள இப்பாடசாலையில் சுமார் 700 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தற்போது கிழக்கு மாகாண சபையினூடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் மிக நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் காணப்படும் அல் ஹி-ஹிறா பாடசாலையின் கட்டிடங்கள் மற்றும் அலுவலம் என்பன புனரமைக்கப்படுகின்றன.

LEAVE A REPLY