கிழக்கை கிழக்கான்தான் ஆழுகின்றான் பரவிக் கிடக்கும் பிரதேசவாதத்தை ஒழித்து, அதிகாரத்தின் மூலமாக உரிமையை வென்றெடுப்போம்!

0
193

(செம்மண்ணோடைசலீம்)

Eastern SriLankaமுஸ்லிம் சமூகத்த்தின் உரிமையை வென்றெடுக்க அதிகாரம் என்ற சக்தி இன்றியமையாத ஒன்றாகும். இதனுடைய அவசியம் கருத்தையே மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப்  அரசியல் கட்சியினை ஆரம்பித்தார்.

இதில் அன்றிலிருந்து இன்று வரை குறிப்பிடத்தக்க அளவு பங்காற்றியவர்கள்கட்சியின் போராழிகளான கிழக்கு முஸ்லிம்களே ஆவர். அவ்வாறு உறுதியாக உணர்வோடு உரிமைக்காக குரல்கொடுத்து போராட்ட களத்தில் பிரதேசவாதத்திற்கு அப்பால் நின்று செயற்பட்டு சாதித்து காட்டினார்கள். ஆனால் இன்று துரதிஸ்டவசமாக கிழக்கிலே பிரதேசவாதம் என்ற காற்று வீசத்தொடங்கி இருப்பது கவலை அளிக்கிறது.

இதன் மூலமாக எங்களது உரிமைக்கே வேட்டு வைக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக இக்கட்டுரையை எழுத முனைந்தேன். “கிழக்கின் எழுச்சி”யின்பின்னணி என்ன..? என்பதனை கவனம் செலுத்தி அதனை களைய வேண்டிய கடமையும் என்னைப் போன்ற போரழிகளுக்கு இருக்கின்றது.

“கிழக்கின் எழுச்சி” என்ற போர் நாமத்துடன் கிழம்பி இருக்ககூடியவர்களுடைய நிலைப்பாட்டினையும் செயற்பாட்டினையும் உற்றுநோக்கினால் “கிழக்கை கிழக்குக்கு அப்பாலுள்ளவன் ஆழுகின்கின்றான்” என்ற தோரணையில் பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும்அமைந்திருப்பதனை அவதானிக்கலாம். இதன் காரணத்தில்தான் எனது கட்டுரையின் தலைப்பை “கிழக்கை கிழக்கான்தான் ஆழுகின்றான்” என்று பெயர் சூட்டியிருக்கின்றேன்.

உண்மையில் பாலர் பாடசாலை மாணவன் கூட தெரிந்து வைத்திருக்கின்ற இந்த சாதாரண செய்தி, படித்த இந்த  மேதைகளுக்கு தெரியாமல் போனதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கின்றது. “கிழக்கின் எழுச்சி” என்ற கோசத்தை எழுப்புகின்றவர்கள் யார்? எதற்காக? என்று பார்த்தால், உண்மையில் உரிமை! உரிமை! என்று கொள்கையுடன் செயற்பட்டவர்கள் இன்று “கிழக்கின் எழுச்சி” என்றகோசத்தைஎழுப்புவதன் ஊடாக மக்களை திசை திருப்ப எத்தனிக்கின்றனர் என்பதுதான் யதார்த்தம்.

இதற்கு வெளிப்படையாக மேடை போட்டு பேசித் திரிகின்றவர்களை பற்றி நான் எழுத முனையவில்லை. காரணம் அவர்களைப்பற்றி சமூகத்திற்கு நன்கு தெரியும் அவர்கள் தனது வயிற்றை நிரப்புவதற்காகவும் பதவிக்காக இடையில் கட்சியில் ஒட்டிக்கொண்ட ஒட்டுண்ணிகள். ஆதலால் அவர்களை அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. ஆனால் ஒருவரை பற்றிப்பிடித்து பின்புலமாக இருந்து கொண்டு செயற்படுகின்ற கட்சியில் முக்கிய பொறுப்பாளாராக இருக்கின்றவர் பற்றிய நிலைபாடுகளையும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகளையும்தெரிந்து செயற்படுவது எமது பொறுப்பாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்என்ற இயக்கத்தின் ஊடாக பாராளுமன்ற கதிரையை பல தசாப்த காலம் அலங்கரித்தவர் ஆனால் அந்த அதிகாரத்தின் மூலமாக சமூகத்திற்கு எந்த விமோசனத்தை பெற்றுக் கொடுக்க நாட்டம் கொள்ளாதவர். அபிவிருத்தி என்ற பெயரில் ஒரு செங்கல்லையாவது நட்டு சாதித்ததும் கிடையாது. குறிப்பாக அமானிதத்திற்கு அப்பால் அதிகார துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. அதையும்  தாண்டி ஒரு வேடிக்கை, ஒவ்வொருநாளும் தாருஸ்ஸலாமுக்குள் சென்று வருபவர் அதனுடைய சொத்துரிமை பற்றி தெரிந்து கொள்ள நாட்டம்கொள்ளாதவர் இன்று அதனை தூக்கிக்கொண்டு வருவதானது அவருடைய இயலாமையை காட்டுகின்றது.

இவ்வாறு மூன்று தசாப்தகாலங்கள் அரசியல் அதிகார கதிரையை அலங்கரித்தது மாத்திரமேமிச்சம்.

கிழக்கு மாகான அதிகாரம் கிடைத்த விடயத்தினையும், மூன்று தசாப்த பாராளுமன்ற அதிகாரத்தை அனுபவித்த வரலாற்றினை வைத்து ஒப்பீடு செய்தால் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் தெளிவானதாகும். ஓரிரு வருடங்களுக்குள் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. உறுதியில்லா காணி உரிமையாளர்களுக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது. பாதைகள் இடப்பட்டிருக்கின்றது. இன்னோறன்ன வேலைத்திட்டங்கள் நிறைவு பெற்றும் இன்னும் செயற்படுத்தப்படவும் உள்ளது. ஆனால் இன்று இதனை தாங்கிக்கொள்ளாமுடியாமல் பதவி மோகத்தினால் பிரதேசவாதம் பேசுவது வேடிக்கையானது. உண்மையில் “கிழக்கை ஆழக்கூடியவன் ஏறாவூரான்தான்” என்பது அவருக்கு பெறும்  இடிதான்.

இன்னுமொரு முக்கியஸ்தாரான தேசியப்பட்டியலை எதிர்பார்த்து ஏக்கம் விட்டு ஏமாந்து போனதன் காரணமாக கட்சியையும் கட்சி தலைவரையும் விமர்சித்து அவரும் கிழக்கின் எழுச்சிக்காக கிழம்பி இருக்கின்றார். இது வேடிக்கையாக இருப்பினும் வேதனையான விடயமுமாகும் இதற்கெல்லாம்  காரணம் சமூக உணர்வல்ல சுயநலமே!

ஒரு முஸ்லிம் பாதிக்கப்படுகின்றபோது இன்னொரு முஸ்லிம் பங்கெடுக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. “பலஸ்தீனம் பத்தி எரிகின்றது என்றால்.. இலங்கை முஸ்லிம் பதறுகின்றான்.” “சிரியாகுழந்தைகள் கொள்ளப்படுகின்றார்கள் என்றால்… இங்குநாம் கொந்தளிக்கின்றோம்.” இப்படியான உணர்வோடு இருக்கின்ற நாம். இலங்கை முஸ்லிம்களின் உரிமையாக இருக்கட்டும், அவர்களின் அபிவிருத்தியாக இருக்கட்டும் அதனைசாதிக்கஎடுக்கின்றமுன்னெடுப்புக்குபிரதேசவாதம் பேசி “அவன் செய்ய கூடாது. இவர்களுக்கு செய்து கொடுக்க கூடாது நான்தான் செய்யவேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டுதானும்செய்வதுமில்லை செய்யக்கூடியவனை விடுவதுமில்லை என்ற நிலமையை அவதானிக்கினற போது சமூக சிந்தனையற்றவர்களாகத்தான் அவர்களை பார்க்க கூடியதாகஉள்ளது.

என்னுடைய பார்வையில் இவர்கள் “முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்”. இது மாத்திமல்ல இவர்கள் சென்ற மாகாண சபை தேர்தலின் முற்பாடும் பிற்டபாடும் சதிகளை செய்த குள்ள நரிகள். கிழக்கு மாகாண முதலமைச்சரை பெறுகின்ற போராட்டத்தில் கட்சியும் கட்சியின் தலைமையும் செயற்பட்டுகொண்டிருந்தபோது இவர்கள் சகோ ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்களை இந்த அதிகாரத்துக்கு கொண்டு வரக்கூடாது என்று சதி செய்தவர்கள். சமகாலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமை விமர்சித்து எதிராகவும் செயற்பட்டு கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.

மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின்னால் தற்போதைய தலைவர் அவர்கள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பல சதிகளை சந்தித்து சாணக்கியத்தால் சாதித்து காட்டிருக்கிறார். இதற்கு அன்று தலைவரோடு சேர்ந்து செயற்பட்ட இவர்கள் இன்று முரண்பட ஏதுவான காரணம் எதுவாக  இருக்கும் என்பதனை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

எதுவாக இருப்பினும் எமது சமூகத்தின் உரிமை, காணிப்பிரச்சினை, எல்லை நிர்ணயம் என்று ஏரலமான சவால்கள் எம்முன்னால் இருக்கின்ற போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற சூழ்நிலையில் “கிழக்கின் எழுச்சி” என்றகோசம்;  உள்வீட்டு சூழ்ச்சியே! இவற்றை கவனத்தில் கொண்டு இதற்கு தக்கபாடம் புகட்ட, தலைமையை பலப்படுத்த போராழிகள்  புரப்படவேண்டும் என்று அன்பான அழைப்புவிடுக்கின்றேன்.

LEAVE A REPLY