மகளின் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த பிரித்தானிய பெண்ணுக்கு வீடு திரும்பியதும் காத்திருந்த ஆச்சரியம்.

0
223

-எம்.ஐ.அப்துல் நஸார்-

unnamed (15)மூன்று பிள்ளைகளின் தயான 27 வயதுடைய லூசி புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது மூன்று வயதுடைய மூன்றாவது மகள் எமிலி கசிட்டிக்கு சிகிச்சையளிப்பதற்காக தனது ஏனைய இரண்டு பெண் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கடந்த ஜுன் மாதம் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமின் ஸ்ரெட்ச்போட்டில் அமைந்திருந்த தனது பழைய வீட்டிலிருந்து அமெரிக்காவின் புளேரிடாவிலுள்ள ஜக்சொன்வில்லேக்குச் சென்றார்.

லூசி அமெரிக்காவில் தனது மகளின் சிகிச்சைக்காகத் தங்கியிருந்த வேளையில், அயலவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளூர் வர்த்தகர்கள் போன்றோர் ஒன்றிணைந்து லூசியின் பழைய, இடிந்து விழக்கூடிய நிலையிலிருந்த வீட்டினை புனர் நிர்மாணம் செய்ய ஆரம்பித்தனர்.

unnamed (11)சமயலறை முற்றுமுழுதாக மாற்றப்பட்டு சுவர்கள் புது மெருகு பெற்றன. இது தவிர வீடும் விசாலப்படுத்தப்பட்டது. எமிலி அந்த வீட்டில் இருந்தவாறே குணமடைவதற்கு ஏதுவாக அந்த குடும்பத்தினர் வசிப்பதற்கேற்ற தூய்மையானதும், விசாலமானதும், காற்றோட்டத்துடன்கூடியதுமான வீடாக அது மாற்றியமைக்கப்பட்டது.

எமிலி சிறு குழந்தையாக இருந்தபோது அவளின் கண்ணின் பின்புறமாக புற்றுநோய்க் கட்டியொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் எமிலிக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஏலவே நோய் உடலில் பரவியிருந்ததால் வைத்தியர்கள் எமிலிக்கான சிகிச்சையினைத் தொடர்ந்தனர்.

unnamed (7)பின்னர், அருகிலுள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை மிகவும் குறைத்து புற்று நோய் கலங்களை அழித்து விடும் சிகிச்சையான புரோட்டன் பீம் தெரபி என்ற சிகிச்சையினை வழங்குவதற்காக அமெரிக்காவுக்குச் செல்வதற்கு தேசிய சுகாதார சேவை நிதியுதவியளித்திருந்தது.

அதேவேளை, ஹெல்ப் ஹர்ரி ஹெல்ப் அதஸ் அமைப்பைச் சேர்ந்த 32 வயதான ஜோர்ஜி மொஸெலி தனது இலக்கான எமிலியின் குடும்பத்தின் வீட்டை புனர்நிர்மாணம் செய்கின்ற பணியில் முழுமையாக ஈடுபட்டார். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ஜோர்ஜி மொஸெலின் மகன் 2011 ஆம் ஆண்டு புற்று நோய் காரணமாக மரணமடைந்தார். அழிவடைந்து செல்லும் இந்த வீட்டை அவதானித்த மொஸெலின் முகநூல் உதவிக் கோரிக்கையொன்றினைத் தொடங்கினார்.

unnamed (12)‘எமிலி தொடர்ச்சியாக வைத்தியசாலையிலேயே தங்கியிருக்கிறாள், அவளது வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. அவர்கள் வீடு திரும்பும்போது, மிக அமைதியான சூழலில் அவர்கள் வாழ வேண்டும்’ என மொஸெலின் குறிப்பிட்டார்.

மொஸெலின் முகநூல் உதவிக் கோரிக்கைக்கு அபரிமிதமான ஆதரவு கிடைத்தது. அந்தப் பிராந்தியத்திலுள்ள ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் அந்தக் குடும்பத்திற்கு உதவ முன்வந்தன.

‘நான் நாட்டில் இல்லாதபோது எனது வீட்டில் சில திருத்த வேலைகள் செய்யப்படுவதாக கேள்வியுற்றேன். நான் நினைத்திருந்ததெல்லாம் கூரையினை மாற்றி, சிறிது பூச்சு வேலைகளைச் செய்து கொஞசம் வர்ணம் தீட்டப்பட்டிருக்கும் என்றுதான் ஆனால் அந்த அளவிற்கு வேலைகள் இடம் பெற்றிருக்குமென்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. நான் வீட்டினுள் நுழைந்தபோது புதிய வீடொன்றினுள் நுழைந்ததுபோல் உணர்ந்தேன்’ என லூசி தெரிவித்தார்.

‘ஒரு கனவு மெய்ப்பட்ட நிகழ்வே இந்த வீட்டின் புனர் நிர்மாணமாகும். உண்மையில் இது ஒரு சமுதாயத்தின் ஊக்கமாகும்’ என மூன்று பிள்ளைகளின் தாயான கெஸிடி தெரிவித்தார்.

‘சமையலறையில் அடுப்பு மற்றும் உணவு உண்பதற்கான அறை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னர் பாத்திரம் கழுவும் சமையலறைத் தொட்டி உடைந்து போனதால் நான் கழுவும் வேலைகளைச் செய்வதில் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கினேன்’ என தான் பட்ட சிரமங்களை நினைவு கூர்ந்தார் லூசி.

unnamed (13)எமிலியின் படுக்கையறை ஒரு இளவரசியின் படுக்கையறை போன்று மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர் தனது விளையாட்டுப் பொருட்களை அங்கு வைத்து மகிழ்ச்சியாக விளையாட முடியும்.

எமிலியின் சகோதரிகளான செலேயி, செல்ஸியா ஆகியோருக்கும் சிறந்த முறையிலான படுக்கையறைகள் வழங்கப்பட்டுள்ளன.

‘எமிலிக்கு இது அவளது வீடு என்பது தெரியும் ஆனால் அது அவளது புதிய மெத்தை, புதிய வளையாட்டுப் பொருட்கள் என்பதை விளக்க வேண்டும். அவள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றாள்’ என லூசி மகிழ்ச்சி தெரிவித்தார்.

முன்னர் மிக மோசமாகக் காணப்பட்ட அந்த வீட்டிற்கு மீள மின் இணைப்புக்ள, பொருத்து வேலைகள் செய்யப்பட்டதோடு புதிய தளபாடங்கள் போடப்பட்டு வுp;டுக்கு பளிச்சிடும் வர்ணமும் பூசப்பட்டது.

பின்புறத் தோட்டத்தில் நிலம் அழகு செய்யப்பட்டதோடு முன்புறத்தில் புளொக் கற்களால் நடைபாதையும் அமைக்கப்பட்டது.

unnamed (8)பேர்மிங்ஹாமின் தெற்கு மற்றும் நகரக் கல்லூரிகளைச் சேர்ந்த பயிலுநர்கள்ஈ உள்ளூர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுடன் இணைந்து இத்திட்டத்தில் பணியாற்றியதோடு, வீடு விரிவாக்கப்பட்டதோடு கூரையும் போடப்பட்டது.

இந்த புனர் நிர்மாண வேலைகளுக்கு 60,000 பவுண்ஸ் செலவானதாக ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது.

‘எனது கனவு நிறைவேறியுள்ளது. நான் அளவு கடந்து மகிழ்ச்சியடைந்துள்ளேன்;’ என தெரிவித்தார் லூசி

LEAVE A REPLY