35 வயதுடைய வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் மாயம் : நடந்தது என்ன.?

0
201

Missing144_0_1பண்டாரகம, அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் நஸ்ரின் என்னும் வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக வர்த்தகரின் தந்தை பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கந்தளாய் ஹோட்டல் ஒன்றில் குறித்த வர்த்தகர் நேற்று தங்கியிருந்துள்ளதாகவும் வங்கியொன்றில் இடம்பெற்ற தங்க நகை ஏலவிற்பனைக்கு குறித்த வர்த்தகர் சென்றுள்ளதாகவும் அவரிடம் சுமார் ஒரு கோடி ரூபா பணம் இருந்துள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகருடன் எவ்வித தொடர்புகள் இதுவரை கிடைக்காததால் அவர் காணாமல் போயிருக்கலாம் என அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY