விபத்தில் ஜந்து பேர் காயம்: வைத்தியசாலையில் அனுமதி

0
133

(அப்துல்சலாம் யாசீம்)

accident-logoதிருகோணமலை மொறவெவ மற்றும் தலைமையக பொலிஸ் பிரிவுகளில் இடம் பெற்ற வீதி விபத்துக்களில் ஜந்து பேர் காயமடைந்த நிலையில் நேற்றிரவு (04) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி திரியாய் சந்தியிலுள்ள வளைவில் போக்குடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.

விபத்தில் கோமரங்கடவெல-கன்தமலாவ பகுதியைச்சேர்ந்த யூ.எச்.சாறுக்க (31 வயது) மற்றும் நிக்கவெவ -கலன்பிந்துனுவெவ பகுதியைச்சேர்ந்த எச்.எம்.ஜானக்க (40 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மஹதிவுல்வெவ குளத்தை அண்மித்த பகுதியிலுள்ள வளைவில் இளைஞர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதில் இருவர் காயமடைந்தனர்.
இதில் ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்த ஆர்.றிஹான் (21 வயது) எச்.நப்ரீஸ் (18 வயது) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அத்துடன் திருகோணமலை நகரை அண்மித்த வைரவன் கோயிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த
வயோதிபருடன் லொறி மோதியதில் உப்புவௌி-நாவலர் வீதி இலக்கம் 631/34 வசித்து வரும் ஈ.பார்த்தீபன் (50 வயது) படுகாயமடைந்துள்ளதுடன் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துக்கள் தொடர்பாக மொறவெவ மற்றும் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY