வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 24வயது இளைஞர் போதை மாத்திரைகளுடன் கைது

0
132

(வாழைச்சேனை நிருபர்) 

unnamed (3)வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பகுயிதில் வைத்து போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைபற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

போதை வஸ்து மாத்திரைகளை விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர் கல்முனை பிரதேசத்தில் இருந்து மாத்திரைகளுடன் வாழைச்சேனை பிரதேசத்திற்கு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இளைஞரை கிரான் பிரதேசத்தில் வைத்து சோதனையிட்ட போது தான் பயணித்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்த நிலையில் 170, 150 மாத்திரைகளும் 05அப கஞ்சாவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 24வயது இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY