செம்மண்ஓடையில் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் சகோதரியின் வீட்டுக்கு தீ வைப்பு

0
236

(வாழைச்சேனை நிருபர்)

7கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலளர் பிரிவில் செம்மண்ஓடை எம்.பி.சி.எஸ். வீதியில் புதிதாக கட்டப்பட்டு பூரணப்படுத்தப்படாத வீடு இனந்தெரியாதோரால் இன்று (05.09.2016) அதிகாலை 02.00 மணியளவில் தீவைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

செம்மண்ஓடையைச் சேர்ந்த எம்.ஏ.அப்துர்றஹ்மான் என்பவர் புதிதாக கட்டிய வீடு இன்று அதிகாலை இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது திடீர் என்று வெளிச்சம் தென்படுவதைக்கண்ட அயல் வீட்டு உரிமையாளர் கண்டதையடுத்து பொது மக்களினதும் மட்டக்களப்பு மாநாகர சபையின் தீ அனைப்பு பிரிவினரதும் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ் வீட்டில் மின்சாரம் இல்லாததால் இது இனந்தெரியாதேரால் வைக்கப்பட்ட தீயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ் வீடு கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் சகோதரியின் வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

Burn 2 Burn 1

LEAVE A REPLY