கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு பதவி பொத்துவிலுக்கு

0
169

(முகம்மது றிஸ்வான்)

Pottuvil-Point.10நீண்ட காலமாக அரசியல் அதிகாரமில்லாத பொத்துவில் பிரதேசம் பல்வேறு தேவைகளுடனும் குறைபாடுகளுடனும் காணப்படுவது யாவரும் அறிந்ததே.

முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக திகழும் இப்பிரதேசத்திட்கு நீண்ட காலமாக எந்தவிதமான அரசியல் அதிகாரங்களும் வழங்கப்படாமல் இருப்பதானது கட்சியின் வாக்கு வாங்கியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை அறிந்த தலைமை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொத்துவில் பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது பொத்துவிலுக்கு அதிகாரமுள்ள மாகாண சபை அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.

அந்த வகையில் அண்மையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் பொத்துவிலிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒரு வேட்பாளர் களமிரக்கப்படவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் களமிறக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது கடந்த கால தேர்தல் முடிவுகளின் மூலம் அறிய முடிகின்றது .

அந்த வகையில் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவிருக்கும் பொத்துவில் உறுப்பினருக்கு தலைமை வாக்களித்தது போல் மாகாண அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக மேலே குறிப்பட்டவாறு தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறை மாகாண சுகாதார அமைச்சை தன் கைக்குள் வைத்திருக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கு அடுத்த முறையும் குறித்த அமைச்சு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அது சுகாதார துறையில் பின் தங்கிய நிலையிலுள்ள பொத்துவில் பிரதேசத்துக்கு வழங்கப்படும் என அரசியல் விமர்சகர்களாலும் பொது மக்களாலும் நம்பப்படுகின்றது

இவ்வாறு நடைபெறும் சந்தர்ப்பத்தில் தனது பொத்துவில் வாக்கு வங்கியில் ஏற்படவிருக்கும் வீழ்ச்சியானது கணிசமான அதிகரிப்பாக மாற்றமடையும் எனவும் அறிய முடிகின்றது.

இவ்வாறு மாகாண சபை உறுப்பினர் ஆவது யார் எனும் கேள்வி மக்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருக்கின்றது .

முன்னாள் தவிசாளர் அப்துல் வாசித் முன்னாள் பிரதி தவிசாளர் தாஜுதீன் மாஸ்டர் முன்னாள் உறுப்பினர் ஹில்டன் ரஹீம் மூவரில் ஒருவரை தலைமை தெரிவு செய்யலாம் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY