ஏறாவூரை சேர்ந்த முஹம்மது சப்றாஸ் கிரிக்கட் சுற்று போட்டியில் தங்க பதக்கம்

0
45

Ball Test Cricket(வை.எம். பைரூஸ்)

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் ஆண்டில் கற்கும் மாணவனான ஏறாவூரை சேர்ந்த முஹம்மது சப்றாஸ் நாடளாவிய ரீதியில் நடக்கும் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கட் சுற்று போட்டியில் நேற்று (04) நடைபெற்ற இறுதிப் போட்டியில் தங்க பதக்கம் பெற்றார்.

இலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கிடையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் பெறும் இவ் விளையாட்டு போட்டியானது (மினி ஒலிம்பிக் என்றும் அழைக்கப்படுகின்றது) அதில் இடம் பெற்ற கிரிக்கெட் போட்டியிலயே ஏறாவூரைச் சேர்ந்த சப்றாஸ் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இதன்மூலம் ஏறாவூர் பிரதேசத்துக்கும் முழு கிழக்கு மண்ணுக்கும் பெறுமை சேர்த்துள்ளார்.

இவரே ஏறாவூர் பிரதேசத்தில் முதன்முறையில் பல்கலைக்கழக இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற ஒரே வீரர் ஆவார். இறுதிப் போட்டியில் இவர் 8 ஓவர்களை வீசி இரண்டு ஓவர்களில் எது வீத ரன்களுமின்றியும் மற்றும் மொத்தமாக இரண்டு விக்கட்கள் அடங்களாக 21 ஓட்டங்களையும் கொடுத்துள்ளார். இதில் இவருடைய கெட்ரிக் வாய்ப்பு சற்று நழுவ விடப்பட்டுள்ளது.

“ஏறாவூரில் பிரபல்யமான விளையாட்டு கழகமான yhsc யின் நட்சத்திர வீரரான இவர் கடந்த காலங்களில் மாவட்ட, மாகண ரீதியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.

கிரிக்கட் வரலாற்றில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே தனது திறமைகளை வெளிக்காட்டி வரும் சப்றாஸ் மெம்மேலும் சிறப்புடன் விளையாட வாழ்த்துகிறோம்.

LEAVE A REPLY