காத்தான்குடியில் கேரளா நாட்டு கஞ்சாவுடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது

0
36

Arrested kky(வாழைச்சேனை நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி கர்பலா வீதியில் வைத்து கேரளா நாட்டு கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று இரவு 06.30 மணியளவில் கைது செய்யபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் தெரிவித்தார்.

குறித்த இளைஞர் கஞ்சாவுடன் நடமாடுவதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இளைஞரின் நடமாட்டத்தை பின் தொடர்ந்த போது காத்தான்குடி கர்பலா வீதியில் வைத்து 4340அப கேரளா கஞ்சாவுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுளார்.

சந்தேக நபரான இளைஞர் காத்தான்குடி – 06 டீன் வீதியைச் சேர்ந்தவர் என்றும் சேர்ந்தவர் என்றும் 18 வயதுடைய இளைஞரான இவரையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் மேலதிக விசாரனைக்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY