லங்காதீப பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

0
119

(அப்துல்சலாம் யாசீம்)

Trincomaleeதிருகோணமலை-மொறவெவ பிரதேச ஊடகவியலாளர் தாக்குதலுக்குள்ளான நிலையில் இன்று (04) மாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் திருகோணமலை-மொறவெவ பகுதியைச்சேர்ந்த லங்காதீப பத்திரிகையின் பிராந்திய செய்தியாளரான எஸ்.திஸாநாயக்க (65வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-தான் தனது கடையில் இருக்கும் பொழுது மதுபோதையில் வந்த நபர் நீ ஒரு செய்தியாளரா என கேட்டு விட்டு தாக்கியதாக பாதிக்கப்பட்ட செய்தியாளரின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY