கல்முனை பீகாஸ் கெம்பஸின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் வைபவம்!

0
100

(அஸ்லம் எஸ்.மௌலானா)

unnamed (1)கல்முனை பீகாஸ் கெம்பஸின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் அதன் முகாமையாளர் உவைஸ் முஹைதீன்பாவா தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் பீகாஸ் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளரும் பீகாஸ் கல்வித்துறை பீடாதிபதியுமான பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம கௌரவ அதிதியாகவும் பீகாஸ் நிபுணத்துவ ஆலோசகர் சுஹைர் ஜே.காரியப்பர் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பல்வேறு கற்கை நெறிகளையும் பூர்த்தி செய்த 191 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் திறமைத் தேர்ச்சி பெற்றவர்கள், அதிதிகளினால் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இதில் விரிவுரையாளர்கள், கல்விமான்கள், பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி, பொல்லடி அணியினரால் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY