அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்

0
96

201609041138231614_Oklahoma-rocked-by-one-of-its-strongest-earthquakes_SECVPFமத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா மாநிலத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா மாநிலத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தின் வடமத்திய பகுதியில் உள்ள பாவ்னி என்ற இடத்தின் அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள டெக்சாஸ், தெற்கு டக்கோட்டா, விஸ்கான்சின் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. பாவ்னி பகுதி முழுவதும் அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

ஒக்லஹோமா மாநிலத்தில் எண்ணெய் கிணறுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் இப்பகுதியில் உள்ள நிலபரப்பை பாதித்துள்ளதால் நிலநடுக்கத்தை அடுத்து இங்குள்ள கழிவுநீர் அகற்றும் 35 பாதாள கிணறுகள் உடனடியாக மூடப்பட்டன.

சுமார் ஒருநிமிடம் நீடித்த இன்றைய நிலநடுக்கத்தால் பாவ்னி பகுதியில் உள்ள பழைமையான ஒரு வங்கி கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது. சேத விபரம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY