வங்காளதேசம்: தூக்கிலிடப்பட்ட ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது

0
92

201609041300393014_Bangladesh-media-tycoon-buried-after-hanging-for-war-crimes_SECVPFவங்காளதேசத்தில் போர் குற்ற நடவடிக்கை தொடர்பான வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவர் மிர் காசிம் அலியின் உடல் இன்று அதிகாலை அடக்கம் செய்யப்பட்டது.

வங்காளதேசத்தில் 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவரும் மற்றும் வங்கதேசத்தின் பிரபல ஊடக அதிபருமான மிர் காசிம் அலி என்பவருக்கும் மரண தண்டனை விதித்து 2-11-2014 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

அவர் மீது இளம் விடுதலைப் போராட்ட வீரர்கள் இருவரை சித்ரவதை செய்து, கொன்று உடல்களை சிட்டகாங் ஆற்றில் வீசியது உள்பட 14 குற்றச் சாட்டுகள் சுமத்தப்படடன. இதில் 10 குற்றச் சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மிர் காசிம் அலியின் வழக்கறிஞர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி வங்காளதேச சிறப்பு தீர்ப்பாயம் முன்னர் அளித்திருந்த மரண தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி ஆனது.

எனவே அவர் காசிம்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் இறுதியாக ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்து அதன் மூலம் தண்டனை குறைய வாய்ப்பு இருந்தது. ஆனால் காசிம் அலி ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர விரும்பவில்லை என அறிவித்து விட்டார். அதனால் அவர் தூக்கில் போடப்படுவது உறுதியாகி இருந்தது.

இந்நிலையில், டாக்காவிற்கு புறநகரில் உள்ள கஷிம்பூர் மத்திய சிறையில் இரவு 10.30 மணியளவில் ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவர் காசிம் அலிக்கு நேற்று இரவு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

காசிம்பூர் சிறையில் இருந்து அவரது உடல் பின்னிரவு 12.30 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் மானிக்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான சலா-வுக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

மிர் காசில் அலி கொல்லப்பட்டதை வரவேற்று வங்காளதேசத்தில் நேற்று பெரும்பான்மையான மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, அவர் தூக்கிலிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஜமாத் இ இஸ்லாமி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY