மனைவி கொலை; கணவனுக்கு விளக்கமறியல்

0
162

(அப்துல் சலாம் யாசீம்)

Prisoner+in+jail+cell+prison remandதிருகோணமலை-சிங்ஹபுர பகுதியில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கணவனை இம்மாதம் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (03) திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணறாஜா உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ரத்னபுர-கலவான பகுதியைச்சேர்ந்த நுவன் சந்தன அபேவிக்ரம (20 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கணவன்-மனைவி இருவரும் சிங்ஹபுர பகுதியில் வாடகை வீடொன்றில் வாழ்ந்து வந்தவேளை கடந்த 26ம் திகதி மனைவியை கொலை செய்து துணியால் மூடிய நிலையில் கணவர் தலைமறைவாகி பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தார்.

இவ்வேளை கொழும்பு நகரில் அப்பிள் தட்டியொன்றில் வேலை செய்து வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் இவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY