அபிவிருத்தி தடைப்படும் போராட்டம் ஆரம்பித்து விட்டது: அரச சேவை தொழினுட்ப உத்தியோகத்தர்களின் சங்கம்

0
136

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC00196அபிருத்தி தடைப்படும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாக அரச சேவை தொழினுட்ப உத்தியோகத்தர்களின் சங்கம் சுவரொட்டிகள் மூலம் தெரிவித்துள்ளது.

செப்ரெம்பெர் 6,7,8 ஆகிய தினங்களிலிருந்து இந்தப் போராட்டம் தொடங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகள் சகல அரச அலுவலகங்களுக்கு முன்பாகவும் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாணத்தின் பல நகரங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

அரச சேவை தொழினுட்ப உத்தியோகத்தர்களின் சங்கத்தினால் ஒட்டப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் அரச அதிகாரிகளை விழித்து ‘உயர் அதிகாரிகளே! அபிவிருத்தி தடைப்படும்! தொழினுட்ப உத்தியோகத்தர்களின் போராட்டம் ஆரம்பமாகின்றது,

6/2006 சுற்றறிக்கையின் படி, கள கொடுப்பனவு மற்றும் பணிக் கொடுப்பனவை தொழினுட்ப உத்தியோகத்தர்களுக்கு வழங்கவும், தொழினுட்ப உத்தியோகத்தர்களின் பணி உரிமையை உறுதிப்படுத்தவும்’ என்று கேட்கப்பட்டுள்ளது.

DSC00195 DSC00198

LEAVE A REPLY