முஹாசபா இன் அல்குர்ஆன் கிராத் போட்டி பரிசளிப்பு விழா

0
181

(ஜுனைட் எம்.பஹ்த்)

IMG-20160903-WA0011முஹாசபா மீடியா நெட்வொர்க் இனால் சென்ற ரமழான் காலத்தில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சிறுவர்களுக்கான அல்குர்ஆன் கிராத் போட்டியில் வெற்றியீட்டிய சிறுவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வும் “உலக அரங்கில் நீங்கள் யார்?” நிகழ்வின் இருவெட்டு வெளியிடும் நிகழ்வும் முஹாசபா மீடியா நெட்வொர்கின் பணிப்பாளர் ஊடகவியலாளர் ஜுனைட் எம்.பஹ்த் தலைமையில் நேற்று முன்தினம் (02) அன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளன அஷ்ஷஹீத் அஹமதுலெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொரியியளாலர் சிப்லி பாறூக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கியதோடு “உலக அரங்கில் நீங்கள் யார்?” நிகழ்ச்சி இரு வெட்டினையும் வெளியிட்டு வைத்தார்..

இந் நிகழ்வில் இப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் நிகழ்வுகள் இடம் பெற்றதோடு பிரபலமான காத்தான்குடி கலைஞர்களான பிறைக்குரல் K.L.கமர்தீன், செரண்டிப் முஸ்தபா, பாடகர் அல் ஹாபிழ் ரிஸ்வி ஆகியோரது நிகழ்வுகளும் இந் நிகழ்வை அலங்கரித்தது .

முஹாசபா மீடியா நெட்வொர்க் இனால் நடத்தப்பட்ட இப்போட்டியில் நாடளாவிய ரீதியில் 50 க்கு மேற்பட்ட சிறார்கள் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20160827-WA0008 IMG-20160903-WA0006 IMG-20160903-WA0008 IMG-20160903-WA0010 IMG-20160903-WA0012 IMG-20160903-WA0016

LEAVE A REPLY