காட்டு யானை தாக்கி சிறுமி மரணம்;

0
109

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Elephant Attck 2மட்டக்களப்பு சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி ஒருவர் மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (03) சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மாவடிவெம்பு 1 ஐச் சேர்ந்த ரவீந்திரன் ஷர்மிலா (வயது 11) அவரது தங்கை ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) மற்றும் அவர்களது மாமா ஆகியோர் சைக்கிளில் ஈரலக்குளம் கிராமத்திற்குச் சென்றுவிட்டு சந்தனமடு ஆற்றுப்பகுதி அருகே உள்ள வயல்பாதையூடாக மாவடிவெம்பு கிராமத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் போது காட்டுப்பகுதியிலிருந்து வந்த யானை இவர்களை வழிமறித்துத் தாக்கியுள்ளது.

இச்சம்பவத்தில் சகோதரிகள் இருவரும் காயமடைந்த நிலையில் மாவடிவெம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு படுகாயங்களுக்குள்ளான ஷர்மிலா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி நேற்று இரவு அங்கு மரணமாகியுள்ளார்.

சிறு காயங்களுக்குள்ளான அவரது தங்கை தொடர்ந்து மாவடிவெம்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY