ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 20வது ஆண்டு விழா

0
41

(அஷ்ரப் ஏ. சமத்)

19ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 20வது ஆண்டு விழா இன்று (03) மருதானை அல்ஹிதாய கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் போரத்தின் தலைவா் என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம் சுகையிா் கலந்து கொண்டாா்.

தகவல் அறியும் சட்டத்தை சிறுபான்மையினா் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற தலைப்பில் தேசிய ஊடக நிறுவனத்தின் பணிப்பாளா் நவாஸ் முஹமட் உரையாற்றினாா். மீடியா போரத்தின் மீடியா டயறி மற்றும் வருடாந்த சஞ்சிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட இவ் அமைப்பின் நிருவாக உறுப்பினா்கள் 15 பேர் பதவிக்கு 30 பேர் போட்டியிட்டனா். 15 பேர் கொண்ட நிறுவாக உறுப்பிணா்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டனா்.

தலைவராக ஏகமனாதாக என். எம். அமீன், செயலாளரா சாதீக் சிகான், பொருளாளராக அஹமத் முனவா் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

தெரிவான ஏனைய உறுப்பினர்கள்

எம்.பி.எம். பைருஸ் விடிவெள்ளி -72 வாக்குகள்

ரசீத் எம். ஹபீல் -61

ஏ.எஸ். ஜெசீம் -61

எம். றிபாஸ் -60

மௌலவி முஸ்தபா -56

புர்கான் பீ. இப்திகாா் -51

மும்தாஸ் சருக் -49

எம். ஏ. நிலாம் -48

பெரவுஸ் -46

அஸ்கா் கான் -45

நுஸ்கி முஸ்தாா் -45

சாகிதா -45

ஜாக்கீா் -44

பாயிஸ் -43

ஜெம்சித் -41

ஆகியோா் மேற்படி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனா்.

15 13 09 07

LEAVE A REPLY