பான் கீ மூன்- றிசாத் சந்திப்பு; மகஜர் ஒன்றும் கையளிப்பு

0
257

rishad(இப்னு ஜமால்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம்களின் ஏகபிரதிநிதியாக செயற்பட்டுவருவதை அரவது துணிச்சல் மிக்க முன்னெடுப்புக்கள் கட்டியம் கூறுகின்றன.

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் குரல் வளைகள் எங்கெல்லாம் நசுக்கப்பபடுகின்றதோ அங்கெல்லாம் ஓங்கி ஒலித்த ரிசாத் பதியுதீனின் குரல் இன்று சர்வதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளமை இதற்கு சாண்றாக அமைந்துள்ளது.

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செலயலாளர் நாயகம் பாங்கி மூனை ரிசாத் பதியுதீன் சந்தித்து மகஜர் கையளித்தமையானது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் மீது சர்வதேசத்தின் பார்வையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

இலங்கை முஸ்லிம்களை பிரதிநித்துவப்படுத்தி 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 06 அமைச்சர்கள் 01 முதலமைச்சர் இருந்தும் இவர்களால் முடியாமல் போன விடயத்தை தன்னந்தனியாக இருந்து ரிசாத் பதியுதீன் சாதித்துக் காட்டடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் பயணமானது ஏற்கனவே திகதி குறிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையே கொண்டிருந்தன. இவைகளில் முஸ்லிம் அரசில் பிரதிநிதிகளையோ கல்வியலாளர்களையோ விசேடமாக சந்திப்பதற்கான எவ்விதமான ஏற்பாடுகளை இவரது நிகழ்ச்சி நிரல் உள்ளடக்கியிருக்கவில்லை.

ஜனாதிபதி , பிரதமர், சபாநாயகர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் தமிழ் தலைமைகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளே காணப்பட்டிருந்தன.

இவ்வாறு பாங்கி மூனின் இறுக்கமான சந்திப்புக்களுக்கு மத்தியில் அமைச்சர் ரிசாத் எடுத்த விசேட முயற்சியும் அவரது அயராது உழைப்பும் இங்கு எடுத்துக் கூறப்பட வேண்டியுள்ளது.

ஏனெனில் பாங்கி மூனின் விஜயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளையும், பாங்கி மூனின் விஜயம் தொடர்பில் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த விசேட பிரதிநிதியையும் தனிப்பட்ட ரீதியில் சந்திப்புக்களை மேற்கொண்டு பாங்கி மூனிடம் முஸ்லிம்கள் சார்பாக பேசுவதற்கு அவர் எடுத்த முயற்சி இன்று முஸ்லிம் கல்வியலாளர்களினால் பாராட்டலுக்குள்ளாகியுள்ளது.

அரசியல் தலைமைக்கு அரசியல் சாணக்கியம் அவசியம் வேண்டும். சொற்களில் சாணக்கியம் என்று முழங்கும் சாணக்கியம் அல்ல அது. அமைதியாக இருந்துவிட்டு காரியத்தை சாதிக்கும் தலைமைத்துவப் பண்பு வேண்டும். அதனையே ரிசாத் இன்று மேகொண்டிருக்கின்றார்.

ஏனைய அமைச்சர்களுடன் கூட்டத்தோடு சேர்ந்து பாங்கி மூனை சந்தித்த வட்டத்திற்குள் நில்லாமல் ரிசாத் முஸ்லிம்களை முன்னிலைப்படுத்தி பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்

தன்னுடைய முழு அளவிலான அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பாங்கி மூனை முஸ்லிம்களின் தனித் தரப்பாக சந்திந்தித்தமையானது இன்று இலங்கை அரசியல் வாதிகளேயே மூக்கின் மேல் விரலை வைக்க வைத்துள்ளது.

பாங்கி மூனை சந்திப்பதற்கு முஸ்லிம் தலைமைகள் முயற்சி எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தக் காத்துக் கொண்டிருந்த தமிழ் தலைமைகளும் சிங்கள இனவாதிகளும், இதர முஸ்லிம் கட்சிகளும் ரிசாதின் செயற்பாட்டினால் மூக்குடைந்து போயுள்ளார்கள்.

பாங்கி மூனை சந்தித்த ரிசாத், முஸ்லிம்கள் தொடர்பில் மிகவும் சிறப்பாக வரையப்பட்ட ஒரு மகஜரை கையளித்துள்ளார். அதில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றப்பிரச்சினைகள், யுத்த காலத்தில் கிழக்கு முஸ்லிம்கள் மீது புரியப்பட்ட படுகொலைகள், கிழக்கு காணிப்பிரச்சினைகள் மற்றும் அண்மைக்காலமாக தெற்கு முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற தாக்குதல்கள் – மனித உரிமை மீறல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்செயற்பாட்டின் மூலம் சர்வதேசத்தின் பார்வை இலங்கை முஸ்லிம்கள் மீது திரும்புவதற்கு அமைச்சர் ரிசாத் வழியை ஏற்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY