காத்தான்குடி கபூர் வீதியின் புனரமைப்பு பணிகள் பூர்த்தி

0
108

(எம்.ரீ. ஹைதர் அலி)

HRS_8305நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த காத்தான்குடி கபூர் வீதியை புனரமைப்பு செய்வதற்காக கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 03.08.2016ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் கபூர் வீதி, கபூர் வீதி உள்ளக ஒழுங்கை மற்றும் கபூர் வீதியை அண்மித்த நாகூர் பாவா வீதியின் பூரனப்படுத்தப்பாடாத பகுதி ஆகியவற்றுக்கான புனரமைப்பு பணிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் நேரடி மேற்பார்வையின் கீழ் மிகவும் விரைவாக பூரணப்படுத்தப்பட்டு சிறந்த முறையில் கொங்ரீட் வீதியாக இவ்வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.

பூரணப்படுத்தப்பட்ட வீதியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நேரில் சென்று பார்வையிட்டு, வீதியின் புனரமைப்பு பணிகள் சரியான விதத்தில் நடைபெற்று முடிந்துள்ளது என்பதை உறுதிசெய்து கொண்டார்.

இவ்வீதியானது மக்களின் பாவனைக்காக மிக விரைவில் கையளிக்கப்படவுள்ளது.

HRS_8275

LEAVE A REPLY