சீனாவிடமிருந்து அதிநவீன ஆளில்லா விமனங்களை சவூதி கொள்வனவு

0
113

(எம்.ஐ.அப்துல் நஸார்)

warplaneஎண்ணிக்கை வெளியிடப்படாத அதிநவீன ஆளில்லா விமனங்களை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் சவூதி அரேபியா கைச்சாத்திட்டுள்ளதாக அல்-வதான் செய்தித்தாளை மேற்கோள்காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எம்.கியூ 01 பிரிடேடர் என்ற வகைக்குப் பின்னர் வடிவடிக்கப்பட்ட இந்த ஆளில்லா விமாங்கள் கண்காணிப்பு ஆற்றலையும் வானிலிருந்து தரைக்கு ஏவக்கூடிய இரண்டு ஏவுகணைகளை கொண்டு செல்லக்கூடிய ஆற்றலையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன.

செங்டு விமானக் கைத்தொழில் குழுமத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இவ்வகை ஆளில்லா விமாங்களைக் கொள்வனவு செய்யும் முதலாவது அரபு நாடு சவூதி அரேபியாவாகும் என குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆளில்லா விமானங்கள் மத்திய ஆசியாவின் பெயர் குறிப்பிடப்படாத நாடுகள் உட்பட நான்கு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதேவேளை முக்கியமான சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தள்ளது.

இந்த வகை ஆளில்லா விமானங்கள் 200 கிலேகிராம் சுமையினைச் சுமந்தவாறு 20 மணித்தியாலங்களில் 4,000 கிலோமீற்றர் பயணிக்கக்கூடியது. இதில் ஊடொளி மூலம் வழிப்படுத்தப்படும் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY