மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயலால் நிலைகுலைந்த ஃபுளோரிடா

0
89

160902083135__9100_2996660gபதினொரு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ள முதலாவது புயல் கரையை கடந்துள்ளது.

ஃபுளோரிடாவின் வளைகுடா கடலோரத்தில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ஹெர்மைன் என்ற இந்த புயலால் ஏற்பட்டுள்ள உயிர் ஆபத்து பற்றி ஆளுநர் ரிக் ஸ்காட் எச்சரித்திருக்கிறார்.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளில் ஏற்கெனவே மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கடலோரத்தில் வாழும் மக்கள் உள்பகுதிக்கு இடம்பெயர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கூடங்களையும், அரசு அலுவலகங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு படைப்பிரிவினர் நிவாரணப் பணிகளுக்காக அணிதிரட்டப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY