உடல் நலக்குறைவால் உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் மரணம்

0
234

201609022000035641_Uzbek-President-Islam-Karimov-Dies-After-Stroke_SECVPFஉஸ்பெகிஸ்தான் நாடு, முன்னாள் சோவியத் யூனியனிடம் இருந்து விடுதலை பெற்ற நாடு ஆகும். 1991-ம் ஆண்டு முதல் உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராக இஸ்லாம் கரிமோவ் (வயது 78) இருந்து வந்தார்.

இந்த நிலையில் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இஸ்லாம் கரிமோவ் மரணம் அடைந்தார். உஸ்பெகிஸ்தான் அரசு உடனடியாக இந்த தகவலை உறுதி செய்யவில்லை.

இருப்பினும், கரிமோவ் இறந்த தகவலை துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் அந்நாட்டு கேபினேட் தொலைக்காட்சியில் அறிவித்தார்.

உஸ்பெகிஸ்தானில் அடுத்து அதிபராக யார் பதவி ஏற்பது என்பதை அவரது குடும்பத்தினரும், உயர் அதிகாரிகளும் விவாதித்து முடிவு எடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY