(Flash) சர்ச்சை முடிவுக்கு வந்தது; மாணவன் றிஜான் மின்சாரம் தாக்கியே காயமடைந்தார்: வைத்திய அறிக்கை

0
34

(விசேட நிருபர்)

Kattankudy-boy-burn-by-electricகாத்தான்குடி ரெலிகொம் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து கடந்த 17.8.2016 அன்று 15 வயதுடைய எம்.ஆர்.றிஜான் எனும் மாணவன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த மாணவரை மின்சாரம் தாக்கியதா அல்லது இந்த மாணவர் மீது அசிட் வீச்சு தாக்குதல் இடம் பெற்றதா என்ற வாதப்பிரதிவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் புலனாய்வுகள் இடம் பெற்று வந்த நிலையில், இந்த மாணவர் இன்று (02) வைத்தியசாலையில் சிகிச்சையை முடித்து வீடு வந்து சேர்ந்துள்ளார்.

இந்த மாணவரின் வைத்தியசாலையின் நோய் நிருணய அட்டையில் மின்சாரம் தாக்கியதால் இவருக்கு காயம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rijan burnமின்சாரம் தாக்கி ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சையே இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இவரின் நோய் நிருணய அட்டையின் மூலம் தெரிய வருகின்றது.

காத்தான்குடி டெலிகொம் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கடமைபுரிந்த காத்தான்குடி அல் அமீன் வீதியைச் சேர்ந்த எம்.ஆர்.றிஜான் எனும் மேற்படி மாணவர் குறித்த வர்த்தக நிலையத்தின் மேல்மாடிக்கு சென்ற போது வர்த்தக நிலையத்திற்கு அருகில் வீதியோரமாக செல்லும் மின் இணைப்பிலிருந்து இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவந்தது.

அது தொடர்பான செய்திகள் கட்டுரைகள் விமர்சனங்கள் வெளிவந்து இந்த விடயம் பலராலும் பேசப்பட்ட நிலையில், மேற்படி மாணவனின் நோய் நிருணய அட்டையில் மின்சாரம் தாக்கிய காயமே என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த மாணவருக்கு அசிட் வீசியுள்ளதாகவும் இந்த மாணவனை தாக்கியவரை கைது செய்ய வேண்டும் என்றும் உண்மைக்குப் புறம்பாக இணையதளமொன்று செய்தி வெளியிட்டிருந்ததுடன் ஓரிருவரினால் புலனாய்வுகள் மேற் கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Rijan Hospital

LEAVE A REPLY