இலங்கைக்கு மேலதிக ஹஜ் கோட்டா இல்லை: சவூதி அரேபிய அரசாங்கம் அறிவிப்பு

0
193

02092016vidi1இலங்­கைக்கு இவ்­வ­ருடம் மேல­திக ஹஜ் கோட்டா வழங்­கப்­ப­ட­மாட்­டாது என சவூதி ஹஜ் அமைச்சு அறி­வித்­துள்­ளது. சவூதி அரே­பி­யா­வி­லுள்ள இலங்­கையின் கவுன்­ஸிலர் ஜெனரல் மக்­கா­வுக்குச் சென்று ஹஜ் அமைச்சின்  அதி­கா­ரி­களை சந்­தித்­த­போதே இலங்­கைக்கு மேல­திக ஹஜ் கோட்டா வழங்­கப்­ப­ட­மாட்­டாது என உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

மக்கா, மதீ­னாவின் பாது­காப்பு ஏற்­பா­டுகள் கருதி இம் முறை அநேக நாடு­க­ளுக்கு மேல­திக ஹஜ் கோட்டா வழங்­கப்­ப­ட­வில்லை என முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

மேல­திக ஹஜ் கோட்டா கிடைக்­கா­மை­யினால் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் ஹஜ் கடமை வாய்ப்­பினை இம்­முறை இழந்­துள்­ளனர். நூற்­றுக்­க­ணக்­கானோர் ஹஜ் முக­வர்­க­ளிடம் கட­வுச்­சீட்­டு­க­ளையும் முற்­பணக் கொடுப்­ப­ன­வு­க­ளையும் வழங்­கி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மேல­திக ஹஜ் கோட்­டாவைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தானும் அமைச்சின் அதி­கா­ரி­களும் அரச ஹஜ் குழுவும் இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி மற்றும் தூத­ரக அதி­கா­ரிகளும் கடைசி நேரம்­வரை முயற்­சி­களில் ஈடு­பட்­ட­தா­கவும் இது அல்­லாஹ்வின் ஏற்­பா­டென்றும் அமைச்சர் ஹலீம் தெரி­வித்தார்.

இம்­மு­யற்­சியில் ஈடு­பட்ட அனை­வ­ருக்கும் நன்­றி­களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

இலங்கைக்கு இவ்வருடம் 2240 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

-Vidivelli–

LEAVE A REPLY