ஒலிம்பிக் வெற்றியாளர்கள் பதக்கத்தை கடிப்பது ஏன்?

0
94

colbite1_2976517f150020110_4677740_19082016_aff_cmyஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கனைகள் பதக்கம் பெற்ற கையோடு, அதை வாயில்  கடித்தபடி ஒரு போஸ் கொடுப்பர். இப்படி அவர்கள் பதக்கத்தை கடிப்பது ஏன்?

இந்தக் கேள்வி நம்மில் பலருக்கும் தோன்றியிருக்கும். அதன் விளைவாக மேற்கொள்ளப்பட்ட கேள்விக்கு என்ன பதில் முயற்சியில் தெரிந்துகொண்டது என்னவென்றால்…

‘அதாவது நாம் குழந்தையாக இருக்கும்போது எந்தப் பொருள் கையில் கிடைத்தாலும் அதை முதலில் வாயில்தான் வைப்போம். ஒலிம்பிக் பதக்கம் கையில் கிடைத்தவுடன் நாம் மீண்டும் குழந்தையாகிவிடுகிறோம்….’

ஆனால், இதுவல்ல நிஜம். இப்படித்தான் பரவலாக ஒரு கற்பிதம் உலா வருகிறதாம்.

இந்த ‘பதக்கக் கடிப்பு’ சம்பிரதாயத்துக்குப் பின்னால் எந்த பாரம்பரியமும் இல்லை என்பதே உண்மையிலும் உண்மை எனக் கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

நவீன ஒலிம்பிக் விளையாட்டில்தான் இந்த பழக்கம் ஆரம்பித்திருக்கிறது.

இது தொடர்பாக சி.என்.என் தொலைக்காட்சிக்கு ஒலிம்பிக் வரலாற்று ஆய்வாளர்களின் சர்வதேச கூட்டமைப்பின் தலைவர் டேவிட் வேலச்சின்ஸ்கி கூறும்போது, ‘இது முழுக்க முழுக்க விளையாட்டு புகைப்படக்காரர்களின் ஆர்வ வெளிப்பாடு. பதக்கத்தை கடிப்பது போன்ற புகைப்படம் ஆகச்சிறந்ததாக இருக்கும் என்பது அவர்களது கணிப்பு. அதை நல்லபடியாக வியாபாரம் செய்யலாம் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.

எனவேதான் ஒலிம்பிக் மைதானங்களின் பதக்கக் கடிப்பு புகைப்படங்கள் புகைப்படக்காரர்களின் கட்டாய பழக்கமாகிவிட்டது. எந்த ஒரு விளையாட்டு வீரரும் தானாகவே தனது பதக்கத்தை கடிப்பார் என நான் நம்பவில்லை என்றார். ஒலிம்பிக் பதக்கங்கள் சுத்தமான தங்கம், வெள்ளி, வெண்கல உலோகங்களால் எவ்வித கலப்படமுமின்றி செய்யப்படுவதால் அவற்றை அழுத்திக் கடித்தால் பல்வரிசையிம் தடம் பதிந்துவிடும் என்பது கூடுதல் தகவல் என்று சுவையான தேடலுக்கு விடை கொடுக்கிறது ஹபிங்டன் செய்தி வலைத்தளம்.

LEAVE A REPLY