வங்காளதேச அணியின் பேட்டிங் ஆலோசகராக சமரவீரா நியமனம்

0
118

201609021714348318_Thilan-Samarweera-Appointed-Bangladesh-Batting-Consultant_SECVPFவங்காளதேச அணியின் பயிற்சியாளராக இருந்த ஹீத் ஸ்ட்ரீக்கின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், அந்த இடத்திற்கு பல்வேறு முன்னாள் வீரர்களை வங்காள சேதம் அணி தேடிவந்தது. இந்நிலையில் வங்காள தேசம் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்க ஏற்பாடு செய்தது. அதன்படி நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கார்ட்னி வால்ஷ் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இலங்கை அணியின் திலன் சமரவீராவை பேட்டிங் ஆலோசகராக நியமித்துள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்து அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இந்த தொடருக்கான வங்காள தேச அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அவர் பேட்டிங் ஆலோசனை வழங்குவார்.

இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடரைத் தொடர்ந்து டிசம்பர் – ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் ஆகியவற்றில் தொடர்ந்து விளையாட இருப்பதால் அதிகப்படியாக பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறோம்.

சமரவீரா இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வங்காள தேச அணியின் பேட்டிங் ஆலோசகராக இருப்பார். பீல்டிங் பயிற்சியாளர் ரிச்சார்ட் ஹல்சால் துணைப் பயிற்சியாளராக செயல்படுவார். மேலும் சிறந்த சுழற்பந்து பயிற்சியாளரை தேடிவருகிறோம்’’ என்றார்.

இந்த மாதம் 30-ந்தேதி இங்கிலாந்து அணி டாக்கா வருகிறது. பின்னர் இரணடு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

LEAVE A REPLY