தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: ஹசில்வுட், ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு

0
257

201609021719571861_Josh-Hazlewood-Mitchell-Starc-rested-for-South-Africa-tour_SECVPFஆஸ்திரேலியா அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா தொடரை 3-1 எனக் கைப்பற்றி முன்னிலைப் பெற்றுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி 4-ந்தேதி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் 6-ந்தேதி மற்றும் 9-ந்தேதி நடக்கிறது.

மூன்று வகை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஸ்டார்க் காலில் ஆபரேசன் செய்து கொண்டபின் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற முத்தரப்பு மற்றும் தற்போது நடைபெற்று வரும் இலங்கை தொடரில் விளையாடி வருகிறார்.

தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்குப்பின் ஆஸ்திரேலியா சுமார் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதனால் ஸ்டார்க்கிற்கு அதிக பளு ஏற்படும் என்பதால் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு கொடுக்க முடியு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஹசில்வுட்டும் தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கும் ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் முக்கிய பந்து வீச்சாளர்களான ஹசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற மாட்டார். இலங்கை ஒருநாள் தொடர் நடைபெற்ற கொண்டிருக்கும்போதே ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாட இருக்கிறது.

LEAVE A REPLY