பாகிஸ்தானில் நீதிமன்றத்திற்குள் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி

0
113

201609021248564454_12-Dead-40-Injured-In-Blast-At-Court-In-Pakistans-Mardan_SECVPFபாகிஸ்தானில் உள்ள மார்டன் நகரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளான். நீதிமன்றத்திற்கு மக்களோடு மக்களாக வந்த அவன், முதலில் கையெறி குண்டுகளை விசி தாக்குதல் நடத்திய பின்பு, தான் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.

இந்த தாக்குதலில் கோர்ட்டில் இருந்த வக்கீல்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 52 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

பெஷாவர் அருகில் உள்ள கிறிஸ்தவ காலனி பகுதியில் இன்று காலை தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தற்போது கோர்ட்டில் தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY