(Poem) இறுதி நிமிடங்கள்

0
154

(Mohamed Nizous)

உடலுக்குள் உள்ள
உயிரெனும் battery
முடியப் போவதாய்
மூச்சால் அலர்ட் தரும்.

சேலைன் கேபிளால்
‘செல்’ களை உயிர்ப்பிக்கும்
வேலைகள் நடக்கும்.
வீணாகிப் போகும்.

உறவினர் கூடி
உடலினை ‘டச்’ செய்து
Struck ஆகிய நிலை கண்டு
இறுகிப் போய் நிற்பார்.

ஒட்சிசன் கவரேஜ்
ஒழுங்கின்றிப் போனதால்
இருதய சிக்னல்
ஏறி இறங்கும்.

ஓடி ஆட உதவிய
உறுப்பெனும் Appsகள்
Expire ஆகி
இயங்க மறுக்கும்.

ஓதுகின்ற வசனங்களின்
ஓடியோ போமற்
காதுகளில் விழுந்து
கஷ்டப்பட்டு உள் போகும்.

வைத்திருந்த மெமறியை
வைரஸ் தாக்க
Archive fileகளும்
அழியத் தொடங்கும்

குத்தி நிற்கும் கண்கள்
கூகிளில் தேடாது
சுற்றி நிற்கும் உறவுகளில்
சோகத்தைத் தேடும்.

வேர்ஷன் உயர்வதாக
வேசம் போட்ட ஆத்மா
ஓசை ஏதுமின்றி
ஓடி ஒழியும்…….!

LEAVE A REPLY