வவுனதீவு பிரதேச செயலகத்தில் சுமார் 06 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்ப்பு.

0
117

(முஹம்மட் பயாஸ்)

97207b31-4847-4cf5-9e11-e33ab1f690e0மன்முனை வடக்கு வவுனதீவு பிரதேச செயலகத்தில் விளையாட்டுச்ச்ங்கங்கள்,பொது நிறுவனங்களுக்கான பொருட்கள் இன்று(02.09.2016) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மீழ்குடியேற்ற புனர்வழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ். MLAM.ஹிஸ்புல்லாஹ்MA, MPயினால்  வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது வவுனதீவு பிரதேச விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நெடியமடு பொது மலசலகூடம் இரண்டு, கொத்தியாபுலை பொதுக்கிணறு மற்றும் பிரதேச மருத்துவ நிலையத்திற்கான மின்சாதனப்பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு என பல உதவிகள் இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனதீவு பிரதேச செயலாளர் சுதாகரன் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின்  இனைப்புச்செயளாலர் றுஸ்வின் முஹம்மட் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிபிடத்தக்கது.

a9796633-38c6-47bb-88f1-29f3499a0973

b860f191-622d-4cbd-97f5-343ba694626b

LEAVE A REPLY