(Photos) காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று போட்ட வேகத் தடை திட்டுக்கள் இன்று அகற்றப்பட்டது

0
57

(ஜுனைட் எம்.பஹ்த்/விசேட நிருபர் )

unnamed (10)காத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக 01.09.2016 நேற்றைய தினம் காத்தான்குடி பிரதான வீதியில்   சற்று உயரமான வேகத்தடை திட்டுக்கள் (Rumble Strips) RDA இனால் போடப்பட்டது..

இவ் உயரமான வேகத்தடை திட்டுகள் (Rumble Strips) மூலம் நன்மைகளை விட பாதிப்புக்கள் அதிகம் உள்ளது என பொதுமக்களால் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து RDA இனால் இன்று இவ் வேகத் தடை திட்டுக்கள் (Rumble Strips) நீக்கப்பட்டன..

பிரதான வீதியில் இடம்பெறும் வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியினால் இந்த வேலைகள் காத்தான்குடி வீதிப் போக்குவரத்துப் பொலிஸாருடன் இணைந்து  மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

இது அகற்றப்படுவது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களை தொடர்புகொண்டு கேட்ட போது . இவ் வேகத் தடை திட்டுக்கள் (Rumble Strips) பரிச்சாத்தமாக போடப்பட்டது இது மக்களுக்கு பாதகமானது என தீர்மானித்ததும் இன்று காலை RDA உடன் தொடர்பு கொண்டு அதனை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன் அதற்கமைவாக தற்போது இவ் வேகத் தடை திட்டுக்கள் (Rumble Strips) நீக்கப்படுகிறது என தெறிவித்தார்.

unnamed (13)

unnamed (14)

unnamed (15)

IMG-20160901-WA0012 mms_img-2011028567

LEAVE A REPLY