தேசிய கைத்தொழில் வர்த்தக கண்காட்சி தொடர்பான கலந்துரையாடல்

0
95

unnamed (6)(வாழைச்சேனை நிருபர்)

எதிர்வரும் 22.09.2016 – 24.09.2016 ஆம் திகதி சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள தேசிய கைத்தொழில் வர்த்தக கண்காட்சி தொடர்பான கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப் , ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கலந்துரையாடலில் லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில், வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY