ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்தபோராளிகள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு

0
147

unnamed (5)(வாழைச்சேனை நிருபர்)

கல்முனை 03 பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்தபோராளிகள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள் எதிர் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக அமைச்சர் றிஷட் பதியுத்தீன் அவர்களுடன் தாம் இணைந்து செயற்படபோவதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி யும் கலந்து கொண்டார்.

கல்முனை 3 ல் அமைச்சரின் தனிப்பட்ட நிதியின் ஊடாக தையல் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைத்த வைபவத்தின்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், கல்முனை தொகுதி அமைப்பாளர் ARMஜிப்ரி, பொத்துவில் அமைப்பாளர் மஜீத் SSP , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர் ஹில்மி மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY