லொறி வேகக்கட்டுப்பாட்டை மீறி வாய்க்காலுக்குள் பாய்ந்து தீப்பற்றியது

0
193

(அப்துல்சலாம் யாசீம்)

unnamed (1)திருகோணமலை-கன்தளாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட போட்டங்காடு சந்தியில் நேற்று (01) மாலை லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வாய்க்காலுக்குள் பாய்ந்து தீப்பற்றியுள்ளதாக கன்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பிறிமா தொழிற்சாலையிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற லொறி வேகக்கட்டுப்பாட்டை மீறியதினாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் கன்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

unnamed (2)

LEAVE A REPLY