ஏறாவூர் நகர பிரதேசத்தை போதையற்ற பிரதேசமாக மாற்றும் விஷேட வேலைத் திட்டப் பிரகடனம் வெளியீடு

0
15

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamedபோதையற்ற ஒரு சிறந்த சமுதாயத்தைத் தோற்றுவிக்கும் முகமாக மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவை “போதையற்ற பிரதேசமாக” பிரகடனப்படுத்தி போதையொழிப்பு விஷேட வேலைத் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.

இது சம்பந்தமான விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை (செப்ரெம்பெர் 01, 2016) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் ஏறாவூர் நகர பிரதேசத்துக்கான போதைப் பாவினை ஒழிப்பு பிரகடனமும் வெளியிடப்பட்டது.

அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடப்பிலுள்ள செப்ரெம்பெர் மாதம் முழுவதையும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் போதையொழிப்பின் தீவிர காலப்பகுதியாக விஷேட கவனமெடுத்தல், பிரதி வெள்ளிக்கிழமையும் வரும் ஜும்மா தொழுகைப் பிரசங்கத்தை “போதைப் பொருள் ஒழிப்பு” பற்றிய தொனிப் பொருளில் நடாத்துதல், போதையொழிப்பு துண்டுப் பிரசுரங்களையும் பதாதைகளையும் தொடர்ச்சியாக வெளியிடல், பாடசாலைக் காலைக் கூட்டங்களில் தொடர்ச்சியாக போதையொழிப்பு விழிப்புணர்வுளை வழங்குதல், பேததையொழிப்புக்காக மாணவர்கள் மத்தியில் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தல், முக நூல்களின் ஊடாக பிரச்சாரம் செய்தல், போதையொழிப்பில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY