(Poem) ஸ்டிக்கர் ஹபாய்

0
117

(பௌஷான் முகைதீன்)

உச்சிக் கொண்டையுயர்த்தி
ரெப்பிங் ஸ்காப் கட்டி…
மார்பழகு காட்டி..
மச்சம் ஒன்று வைத்து
மருதோன்றிக் கை நீட்டி…

ஸ்டிக்கர் ஹபாயுடுத்து…
லிப்ஸ்டிக்கால் நிறங்கொடுத்து
செல்பி-ஸ்டிக்கால் படமெடுத்து
பேஸ்-புக்கில் பிரண்டாகி…
நோட்-புக்கில் பெக்காகி…
வட்ஸ்-அப்பில் லிங்காகி
வழிநடந்து போறவளே – எங்கள்
வலியுணர்ந்தா போகின்றீர்?

நெழியும் உன் நடையும்…
சுழியும் உன் உடையும்…
துளிபோல் இடையும்…
அலைபோல் சடையும்…
அம்சமாய் அமைந்தவளே!

கழுகுக் கண்களேல்லாம்-உன்
அழகில் கொழுகி
வழி நெடுகே வலை பின்னி
விபச்சாரம் செய்திட்ட
விபத்தை நீ அறியாயோ…!

போட்டுக்குத் தச்சாயோ?
தச்சிட்டுப் போட்டாயோ?
தடயம் தெரிவதற்குள்
மஹ்சர் வந்துவிடும்…

கழுகுக் கண் கொழுகி
விபச்சார விபத்திற்கு
வித்திட்ட மெய்தானோ
நரகத்தில் தீயாகி
கருகிக் கரைவதற்குள்
கல்புக் கண் திறந்து
கரைசேர் பெண்ணினமே….!

LEAVE A REPLY