மட்டக்களப்பில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

0
103

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

unnamedமட்டக்களப்பில் செப்டெம்பெர் 30ஆம் திகதி தொடக்கம் ஒக்ரோபெர் 02 ஆம் திகதி வரை சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இடம்பெறவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த வர்த்தகக் கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (ருNனுP) மற்றும் லங்கா எக்ஸிபிசன் அன்ட் கொன்பிரன்ஸ் சேர்விசஸ் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை இந்தக் கண்காட்சி பற்றிய நிகழ்ச்சி முன்னோட்டமும் சுருக்க அறிமுகமும் வெள்ளிக்கிழமை (செப்ரெம்பெர் 02, 2016) மாலை 5.30 மணிக்கு மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள சதுனா விடுதியில் இடம்பெறும் என்று அரச அதிபர் அறிவித்துள்ளார்.

இந்த அறிமுக நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளத்தினர், மற்றும் லங்கா எக்ஸிபிசன் அன்ட் கொன்பிரன்ஸ் சேர்விசஸ் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

LEAVE A REPLY