சண்டையின் போது மண்வெட்டியால் வெட்டிய இளம் பெண் கைது

0
136

(அப்துல்சலாம் யாசீம்)

Arrested44திருகோணமலை-தெவனிபியவர பகுதியில் இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது மண்வெட்டியால் வெட்டிய இளம் பெண்ணொருவருவரை இன்று (01) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மண் வெட்டியால் தாக்குதலுக்குள்ளானவர் மொறவெவ-தெவனிபியவர பகுதியைச்சேர்ந்த டி.எம்.எதிரிசிங்ஹ (48வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது இருவர் சண்டை செய்து கொண்டிருந்த போது பார்த்துக்கொண்டிருந்த பெண் மண் வெட்டியால் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் மஹதில்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மண்வெட்டியால் தாக்கிய அதே இடத்தைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான ரம்யதாஷ பிவ்மன்தி (20 வயது) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY