வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் : காணொளி அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

0
160

vasimmmmmmm21படு­கொலை செய்­யப்­பட்ட பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் விவ­கா­ரத்தில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கன­டாவின் பிரிடிஷ் கொலம்­பியா ஆய்­வ­கத்­துக்கு எடுத்துச் செல்­லப்­பட்ட சி.சி.ரி.வி. கண்­கா­ணிப்பு கம­ராக்­களின் ஆய்­வ­றிக்கை நேற்று நீதி­மன்­றுக்கு கிடைத்­துள்­ளது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் அதி­கா­ரியும் கன­டா­வுக்கு ஆதா­ரங்­களை எடுத்­துச்­சென்ற குழுவில் இருந்­த­வ­ரு­மான சார்ஜன் ரத்­ன­பி­ரிய இந்த அறிக்­கையை நேற்று நீதி மன்­றுக்குச் சமர்ப்­பித்தார்.

கொழும்பு நீதிவான் நீதி­மன்றின் கட்­டுப்­பாட்டில் இருந்த இந்த சி.சி.ரி.வி.காட்­சிகள் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சி.டப்­ளியூ. விக்­ர­ம­சே­கர, சார்ஜன் ரத்னப் பிரிய ஆகி­யோரால் கையேற்­கப்­பட்டு அவர்கள் ஊடா­கவே கடந்த 19 ஆம் திகதி இந்த சி.சி.ரி.வி. காட்­சிகள் அடங்­கிய இறு­வெட்­டுக்கள் கன­டா­வுக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டன.

இது தொடர்பில் 36 கேள்­வி­களைக் கொண்ட கொத்­தொன்­றினை தயார் செய்த குற்றப் புல­னாய்வுப் பிரிவு அது தொடர்பில் மன்­றுக்கு அறி­வித்­துள்­ள­துடன், அந்த கேள்­விக்­கொத்­துக்­கான பதில்­க­ளையே சி.சி.ரி.வி. ஆய்­வு­களில் இருந்து எதிர்­பார்ப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­தனர்.
இந் நிலையில் நேற்று கன­டா­வுக்குக் கொண்டு சென்ற 10 சி.சி.ரி.வி. காட்­சி­க­ளையும் உரி­ய­வாறே சீல் வைத்து புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று மன்­றுக்குச் சமர்ப்­பித்­தனர்.

அத்­துடன் 36 கேள்­வி­க­ளுக்­கு­மான பதில்­களை கன­டாவின் பிரிடிஷ் கொலம்­பியா நிறு­வ­னத்தின் பிர­தானி டேவிட் மெகீ வழங்­கி­யுள்­ள­துடன் அத­னையும் பொலிஸார் மன்றில் சமர்ப்­பித்­துள்­ளனர்.

இதனை விட ஜனா­தி­பதி செய­ல­கத்தின் தொலை­பேசி இலக்­கங்கள் தொடர்பில் செய்­யப்­படும் விசா­ர­ணை­களில், யார் யாருக்கு குறித்த காலப்­ப­கு­தியில் தொலை­பேசி அழைப்­புக்கள் எடுக்­கப்­பட்­டன என்­பதைக் கண்­ட­றிய, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கட்­டுப்­பாட்டில் எடுக்­கப்­பட்­டுள்ள சி.பி.யூ.வை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்க கொழும்பு , யூனியன் பிளேஸில் உள்ள பெண்டன்ஸ் லிமி­டட்டின் பிர­தான பொறி­யி­ய­லா­ள­ருக்கு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிசாந்த பீரிஸ் ஊடாக உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக பிர­பல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை­யுடன் தொடர்­பு­டைய சி.சி.ரி.வி காட்­சி­களை அடை­யாளங் காணும் செயற்­பாட்­டிற்­காக கன­டாவில் அமைந்­துள்ள பிரிடிஸ் கொலம்­பியா நிறு­வ­னத்தின் சேவையை பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு கிடைத்­துள்­ள­தாக குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் நீதி­மன்­றத்தில் கடந்த மார்ச் முதலாம் திகதி அறி­வித்­துள்­ளது.

சர்­வ­தேச பொலிஸார் ஊடாக முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கையின் பல­னாக கன­டாவின் குறித்த நிறு­வ­னத்­துக்கு தெளி­வற்ற குறித்த சி.சி.ரி.வி. காட்­சி­களை அனுப்பக் கூடிய சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு இதன்­போது தெரி­வித்­தி­ருந்­தது.

அத்­துடன் குறித்த நிறு­வனம் ஊடாக சி.சி.ரி.வி. காட்­சிகள் குறித்த ஆய்வு தொடர்பில் நேர­டி­யா­கவும் தொடர்­பு­களைப் பேணும் வாய்ப்பு உள்­ள­தா­கவும் புல­னாய்வுப் பிரிவு அறி­வித்­தி­ருந்­தது.

சி.சி.ரி.வி. காட்­சிகள் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் கணினி தொடர்­பி­லான ஆய்வுப் பிரி­வுக்கு அனுப்­பப்­பட்ட போதும் அங்கு அதனை அடை­யாளம் காண முடி­யாது போனது. இந் நிலையிலேயே நேற்று அந்த சி.சி.ரி.வி.காட்சிகள் குறித்த அறிக்கை மன்றுக்கு கிடைத்தது. இது குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

-Vidivelli-

LEAVE A REPLY