காத்தான்குடி தோணாக்கால்வாயை அன்மித்த பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரின் பாடசாலை பை, துவிச்சக்கர வண்டி என்பன கண்டெடுப்பு

0
221

(விஷேட நிருபர்)

DSCN9337புதிய காத்தான்குடி தேனாக்கால்வாயை அன்மித்த பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரின் பாடசாலை பை மற்றும் மாணவரின் துவிச்சக்கர வண்டி என்பன இன்று (01) வியாழக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதிய காத்தான்குடி-02, ஷுஹதா பாடசாலைக்கு அருகாமையிலுள்ள சின்னத்தோனா எனப்படும் கால்வாயை அன்மித்த பகுதியிலேயே மாணவர் ஒருவரின் பாடசாலைப் பை மற்றும் மாணவரின் துவிச்சக்கர வண்டி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைப் பை மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன காலையிலிருந்து 11.00 மணி வரை அவ்விடத்தில் இருப்பதைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் காத்தான்குடி பிரதேச செயலத்திலுள்ள சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் அத்தோடு பொலிசாருக்கும் அறிவித்துள்ளனர்.

அங்கு காணப்பட்ட பாடசாலைப் பையை எடுத்து அப்பிரதேசத்திலுள்ள ஷுஹதா வித்தியாலய ஆசிரியர்களிடம் பொது மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் ஸ்தளத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.நஜீப் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சக்திநாயகம் ஆகிய இருவரும் விசாரணைகளை மேற் கொண்டனர்.

அந்த பாடசாலைப் பையை பரிசோதித்த போது அதற்குள் காணப்பட்ட அப்பியாசக் கொப்பிகளில் எழுதப்பட்டிருந்த தகவலின் படி காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் பாடசாலைப் பை மற்றும் துவிச்சக்கர வண்டி என தெரிய வந்தது.

இதையடுத்து குறித்த மாணவர் பற்றி காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய ஆசிரியர்களிடம் கேட்ட போது குறித்த பெயருடைய மாணவர் இன்று பாடசாலைக்கு சமூகம் கொடுக்க வில்லை என தெரிய வந்தது.

DSCN9333இதையடுத்து குறித்த மாணவர் அப்பகுதியில் நடமாடுவதைக்கண்ட ஒருவர் அவரை அழைத்து வந்து காத்தான்குடி பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் கையளித்துள்ளார்.

பின்னர் இந்த மாணவரை விசாரணை செய்த பின்னர் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றாரிடத்தில் மேற்படி உத்தியோகத்தர்கள் ஒப்படைத்துள்ளனர்

குறித்த மாணவர் எங்கு சென்றார், என்ன நடந்தது என்பது பற்றி மாணவர் எதுவும் தெரிவிக்க வில்லையெனவும், பாடசாலை செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து இன்று காலை வெளியில் சென்ற மாணவர் பாடசாலைக்கு செல்ல வில்லையெனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY