6 வீரர்களின் பதக்கங்களை மீளப்பெற தீர்மானம்

0
103

Olympic2008 பீஜீங் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய 6 விளையாட்டு வீரர்களின் பதக்கங்களை மீளப்பெற சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

8 வருடங்களுக்கு முன்னர் குறித்த வீரர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 6 வீரர்களும் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளமை ஆய்வுகளின் பின்னர் உறுதியாகியுள்ளது.

அத்துடன், இதற்கு முன்னர் கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது பெறப்பட்ட இரத்த மாதிரிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தன. இதன் போது பீஜீங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடிய 55 வீரர்கள் தகுதி இழக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY