ஜனாதிபதியின் இணையத்தளத்தில் ஊடுருவிய 17 வயது சிறுவனுக்கு, ஜனாதிபதி செயலகத்தில் தகவல் தொழிநுட்ப பணிப்பாளர் பதவியை வழங்க வேண்டும்: உதய கம்மன்பில

0
122

420835902Udayaஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவிய 17 வயது சிறுவனுக்கு, ஜனாதிபதி செயலகத்தில் தகவல் தொழிநுட்ப பணிப்பாளர் பதவியை வழங்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேகநபர்களால் இணையத்தில் இருந்த தகவல்கள் திருடப்படவோ, மாற்றம் செய்யப்படவோ இல்லை என சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதியின் கவனத்தை பெறவே அவர்கள் அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், 17 வயதான குறித்த சிறுவன் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் உண்மையான திறமைசாலி என கல்வித் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்கா போன்ற நாடாயின் இந்த சிறுவனுக்கு புலமைப்பரிசில் வழங்கி நன்றாக கற்பித்து சேவையில் இணைத்துக் கொண்டிருப்பார்கள் எனவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை கொலை செய்ய முற்பட்ட விடுதலைப் புலி சந்தேகநபர் மற்றும் சிகிரியாவில் பெயர் எழுதியதாக கூறப்பட்டு தண்டிக்கப்பட்ட யுவதிக்கும் மன்னிப்பளித்ததாக இதன்போது நினைவூட்டிய அவர், இந்த சிறுவனுக்கு மன்னிப்பளிக்காகது ஏன் எனத் தெரியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

-AD-

LEAVE A REPLY