பள்ளிவாயல் நுழைவாயிலை அடைத்து சுவர்கட்டிய பழமைவாத கும்பல்: ஜேர்மனியில் சம்பவம்

0
133

(எம்.ஐ.அப்துல் நஸார்)

37B6A28C00000578-0-image-a-61_1472601057088ஜேர்மனியில் பழமைவாத கும்பலொன்று பள்ளிவாயலின் நுழைவாயிலை அடைத்து சுவர்கட்டியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொங்கிரீட் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட அந்தச் சுவரின் மீது துண்டுக் காகிதங்களில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான எதிர்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன.

ஜேர்மனியின் மெக்லென்பேக் – வொர்பொம்மென் மாநிலத்தின் பேர்ச்சிம் நகரில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

‘நீங்கள் உங்களை விசுவாசிகள் என அழைத்துக்கொள்கிறீர்கள், நாங்கள் உங்களை படையெடுப்பாளர்கள் என அழைக்கின்றோம்’ என துண்டுக் காகித வாசகமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

37B738DA00000578-0-image-a-58_1472601006004மற்றுமொரு துண்டுக் காகித வாசகத்தில் துருக்கிய ஜனாதிபதி எர்டோகனின் ‘பள்ளிவாயல்கள் எங்கள் படைவீடுகள், குமிழ்க் கூரைகள் எங்களது தலைக் கவசங்கள், மினராக்கள் எங்கள் துப்பாக்கி முனைகள், விசுவாசிகள் அனைவரும் எமது போர் வீரர்கள்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தின் பின்னர் அதே சுவரில் முஸ்லிம் சமூகத்தை ஆதரித்து கையால் எழுதப்பட்ட வாசகமொன்று ஒட்டப்பட்டிருந்தது. இங்கிருக்கும் ‘சுவர்கள்’ தகர்த்தெறியப்பட வேண்டியவை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, நீங்கள் நம்பிக்கையினைத் தளரவிடாதீர்கள் உறுதியுடன் இருங்கள் என ஆர்வமூட்டும் கருத்தும் அதில் காணப்பட்டது.

இது ஜேர்மனியின் பேர்ச்சிம் நகர பள்ளிவாயலில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் சம்பவம் என அகதிகளுக்கான உதவிக் குழுமம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY