பிரேசில் அதிபர் தில்மா ருசெஃப் பதவி நீக்கம்

0
99

160829103750_dilma_2993875hபிரேசில் செனட்டில், தில்மா ருசெஃப் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விசாரணையின் முடிவில், அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க அதிகப்படியான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

81 உறுப்பினர்களில், 61 பேர் அவர் வரவு செலவு திட்டத்தில் மோசடி செய்து, நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை மறைத்ததாக அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அதே நேரத்தில், தில்மா ருசெஃப், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பொதுப் பதவிகளை வகிப்பதற்கு எதிராக தடை விதிப்பதில்லை என்று செனட் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

தாற்காலிக அதிபராக இருந்த மெக்கெல் டெம்மர் இன்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் தொழிலாளர் கட்சியின் மூலம் இடதுசாரிகள் நடத்தி வந்த 13 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது.

தில்மா ருசெஃப், தான் குற்றமற்றவர் எனவும், 2014 தேர்தலில் தோற்றவர்கள் செய்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியால் தான் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY