14 மாவட்டங்களில் செப்-7 ஆம் திகதி சுனாமி ஒத்திகை

0
76

tsunamis_detectionசுனாமியினால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி சுனாமி ஒத்திகையொன்றை நடத்த இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைதீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடைபெற உள்ளது. இது தொடர்பில் குறித்த மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களை அறிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சகலரையும் இணைத்து சுனாமி ஒத்திகை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய பிராந்திய சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தின் முன்னெச்சரிக்கை முறைமைகளுக்கு அமைவாக இந்த ஒத்திகை இடம்பெறும்.

#Thinakaran

LEAVE A REPLY