அமெரிக்கா – கியூபா இடையே 55 வருடங்களுக்கு பிறகு விமான சேவை தொடக்கம்

0
93

160831161737_a_us__2993887hஅமெரிக்கா மற்றும் கியூபா இடையே, முதன்முதலில் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்ட விமானம், 55 வருடங்களில் கியூபாவின் சாண்டா கிளாராவில் தரையிறங்கியது.

ஃப்ளோரிடாவின் ஃபோட் லாடெர்டெலிருந்து தொடங்கும் இந்த ஐந்து மணி நேர விமானச் சேவை, ஜெட் ப்ளூ விமான சேவையால், இந்த இரு நாடுகளுக்குமான உறவு தொடர வேண்டும் என்று தொடங்கப்பட்டது.

இந்த புதிய விமான சேவை அமெரிக்கா மற்றும் கியூபாவிற்கு இடையே பயணிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க வழி வகை செய்யும்.

அதிகாரப்பூர்வமாக, அமெரிக்க குடிமக்கள் கியூபா சுற்றுலாப் பயணியாக விஜயம் செய்ய முடியாது. ஆனால் விஞ்ஞானம் மற்றும் கலை வேலைகளுக்காக பயணம் செய்யலாம்.

இந்த புதிய வழித்தடங்கள் 6 அமெரிக்க நகரங்களிலிருந்து கியூபாவின் சிறிய நகரங்களான ஹொல்குயின் மற்றும் கமாகுவேவிற்கு தொடங்கப்பட்டுள்ளது.

ஹவானாவிற்கான நேரடி விமானங்களுக்கான ஒப்புதலுக்காக விமானச் சேவை நிறுவனம் காத்திருக்கின்றது.

இந்த இரண்டு நாடுகளுக்குமான கடைசி விமானம் 1961ஆம் ஆண்டு நடைபெற்றது.

-BBC-

LEAVE A REPLY