மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு

0
84

(வாழைச்சேனை நிருபர்)

unnamed (4)தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் சிரம சக்தி சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினுடாக மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு  நேற்று (31.08.2016) இடம் பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாவடிச்சேனை அல் இக்பால் இளைஞர் கழகத்தின் முயற்சியினால் மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தில் சிறுவர் பூங்கா அமையப்பெறவுள்ளது.

ஒரு வேலைத்திட்டத்திற்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் எழுபத்தையாயிரம் ரூபா வழங்கப்படுவதுடன் ஒரு கழகம் இரண்டு லட்சத்தி இருபத்தையாயிரம் ரூபாய்க்கு குறையாத தொகையில் மக்கள் பங்களிப்புடன் வேலைத்திட்டத்தினை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பாணிப்பாளர் எம்.எல்.என்.எம்.நைறூஸ் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.எம்.ரம்ஸி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவல பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயாளர் அல் அமீன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன, கோறளைப்பற்று மத்தி பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவர் ஜே.எம்.திபாஸ், அல் இக்பால் வித்தயாலய பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY