அதிபர் தேர்தலில் கலவரம்: பாராளுமன்றத்துக்கு தீ வைப்பு

0
115

201609011029452066_Gabon-President-Bongo-re-elected-parliament-set-on-fire_SECVPFஆப்பிரிக்க கண்டத்தில் காங்கோ அருகில் கபோன் என்ற குட்டி நாடு உள்ளது. இங்கு அலிபோங்கோ என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக அதிபராக உள்ளார். தந்தைக்கு பிறகு இவர் அதிபரானார்.

இந்த நிலையில் இங்கு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய அதிபர் அலிபோங்கோவும், எதிர்க்கட்சி சார்பில் ஜீன்பிங் என்பவரும் போட்டியிட்டனர்.

ஓட்டு எண்ணிக்கை முடிந்து நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அதிபர் அலிபோங்கோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

அதிபர் போங்கோ 49.8 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சி தலைவர் பிங் 48.2 சதவீத வாக்குகளும் பெற்று இருந்தனர். அதாவது 5,592 வாக்குகள் வித்தியாசத்தில் அதிபர் போங்கோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை ஏற்க எதிர்க்கட்சி தலைவர் பிங் மறுத்து விட்டார் போங்கோ வெற்றி பெற்றதற்கான ஆவணத்தில் கையழுத்திட மறுத்து விட்டார். தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி எதிர்க்கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ரோடுகள் மற்றும் தெருக்களில் டயர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.

ஒரு கும்பல் பாராளுமன்றத்துக்கு தீ வைத்தது. அங்கிருந்து கரும்புகை வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். கலவரக்காரர்களை அடக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சியடித்து கும்பலை கலைத்தனர்.

LEAVE A REPLY